தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அலைபேசியும் இல்ல, நெட்வொர்க்கும் இல்ல' - பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி! - ஆன் லைன் கல்வி

கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள் என்ற செய்தி நாட்டில் புத்துணர்வை ஏற்படுத்தினாலும், கள யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது என்பதே நிதர்சனம்.

no-network-no-phones-koraput-kids-struggle-with-online-learning
no-network-no-phones-koraput-kids-struggle-with-online-learningno-network-no-phones-koraput-kids-struggle-with-online-learning

By

Published : Aug 8, 2020, 1:55 PM IST

Updated : Aug 9, 2020, 2:40 PM IST

உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் கரோனா தொற்றுப் பரவல் வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது. பலரது வாழ்வாதாரங்கள் முடங்கிப்போய் உள்ள நிலையில், மாணவர்கள் கல்வி கற்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் கல்வி பயில வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பள்ளிக்குச் சென்று நண்பர்களோடு வகுப்புகளை கவனித்து வந்த மாணவர்கள், இன்று வீட்டில் உள்ள தங்களது பெற்றோர்களுடன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என்ற செய்தி நாட்டில் புத்துணர்வை ஏற்படுத்தினாலும், ஆன்லைனில் கல்வி கற்பது பற்றிய கள யதார்த்தம் வருந்தத்தக்கதாக உள்ளது.

மாணவர்களின் ஆன்லைன் கல்வி முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் கல்வி கற்க ஒடிசா அரசு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் பயன்பெற முதலில் மாணவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும்.

ஆல் லைன் கல்வி

மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்ட பகுதிதான் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம். பெரும்பாலும் பழங்குடியின மக்கள் தான் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை வசதிகளின்றி ஒவ்வொரு நாளையும் அவர்கள் கடத்துவதே பெரும் சவால் தான். அங்கு வருபவர்களுக்கு அலைபேசி என்பதே கனவாக இருக்கும் நிலையில், அலைபேசி மூலம் கல்வி பயில்வது எப்படி சாத்தியமாகும்?

ஆனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மாணவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் இல்லை. இதைப்பற்றி ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி சுனி கிர்சானி பேசுகையில், ''எனக்கு பாடப் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. என்னிடம் மொபைல் போன் இல்லை. யாராவது புத்தகங்களில் உள்ளதை சொல்லிக் கொடுத்தால் மட்டுமே நான் படிக்க முடியும்'' என்றார்.

ஒடிசா அரசின் இந்தத் திட்டத்தைப் பற்றி பெற்றோர்களிடம் பேசுகையில், ''பெற்றோர்கள் எங்களுக்கு ஸ்மார்ட்போன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது. நாங்கள் படிக்கவில்லை. வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவது எப்படி என்றே தெரியாது. செல்போன் வைத்திருந்தாலும், இப்பகுதிகளில் நெட்வொர்க் கிடைப்பது எளிதல்ல. முக்கியமாக பல நேரங்களில் மின்சாரமே இருக்காது. அரசின் இந்தத் திட்டத்தை கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. கிராமங்களில் எப்படி வாட்ஸ் ஆப் மூலம் படிக்க முடியும்'' என்றார்.

கோராபுட் பகுதியில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயில்வது சாத்தியமா என்று அம்மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்தோம். அதற்கு அவர், ”அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் கல்வி பயில்வது சாத்தியமில்லாத விஷயம். அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனும் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம். அதில் நகரத்தில் 70 சதவிகித மாணவர்கள், கிராமங்களில் 30 சதவிகித மாணவர்களும் உள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் 60 முதல் 70 சதவிகித மாணவர்கள் பயனடைவார்கள்'' என்றே பதிலளித்தார்.

பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி

மாணவர்கள் அனைவருக்கும் சமமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு கிடைக்காத வரை, ஆன்லைன் கற்றல் என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கும் என்பதற்கு ஒடிசா அரசின் இத்திட்டமே சான்றாக உள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்புகள்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

Last Updated : Aug 9, 2020, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details