டெல்லி: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று டெல்லி மக்களுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க வேண்டாம்' - அரவிந்த் கெஜ்ரிவால் - தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க வேண்டாம்
18:26 November 05
'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க வேண்டாம்' - அரவிந்த் கெஜ்ரிவால்
நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு மற்றும் கரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க, அவற்றை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், ஆகையால் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி திருநாளை கொண்டாடும்படி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
மேலும், டெல்லி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நவம்பர் 14ஆம் தேதி இரவு கொண்டாட இருக்கும் லஷ்மி பூஜையை தான் தொடக்கி வைக்க இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.