தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவுக்கு ஊரடங்கு தேவையில்லை - முதலமைச்சர் எடியூரப்பா - அனைத்துக் கட்சி கூட்டம்

பெங்களூரு: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகாவில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

no-lockdown-in-bengaluru-improving-states-economy-is-equally-important-yediyurappa
no-lockdown-in-bengaluru-improving-states-economy-is-equally-important-yediyurappa

By

Published : Jun 26, 2020, 3:26 PM IST

கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா, “மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் சீரிய முறையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை.

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவருடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன். மாநிலத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித மறைவுமின்றி எடுக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூரு நகரம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிடும்போது கரோனா பரவலால் அதிகளவு பாதிக்கப்படவில்லை. கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் தலைநகர் பெங்களூருவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. மக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் விரைவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிடும்.

அனைத்து எம்எல்ஏக்களிடமும் அவர்களுடைய தொகுதியை நோய்த் தொற்றிலிருந்து மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

ABOUT THE AUTHOR

...view details