தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை' - ரயில்வே விளக்கம் - ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஜ்பாய்

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்கள் சென்றடையும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்
ஷ்ராமிக் சிறப்பு ரயில்

By

Published : May 19, 2020, 7:04 PM IST

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்கள் சென்றடையும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று சேர்க்க இயக்கப்படும், இந்த ஷ்ராமிக் ரயில்களுக்கென, நிலையான வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சில மணிநேரங்களில், இந்திய தேசிய ரயில்வே இது குறித்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து பேசிய ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஜ்பாய், 'ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் சென்றடையும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்றும், இன்று வெளியிடப்பட்ட புதிய வழிமுறைகளில் ரயில் சென்றடையும் மாநிலங்களிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயமல்ல' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் இந்த ஷ்ராமிக் ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்க, காலம் தாழ்த்துவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தவிர, கடந்த மே ஒன்றாம் தேதி முதல், நாடு முழுவதும் 1,565 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :26 விஷால் மெகா மார்ட் கடைகளுடன் கைகோர்க்கும் ஃபிளிப்கார்ட்!

ABOUT THE AUTHOR

...view details