தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்னை? பாஜக மூத்த தலைவர் பதில் - கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னை

பெங்களூரு: கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லைப் பிரச்னை இல்லை என்று மாநில பாஜக மூத்த தலைவர் பசவராஜ் கூறினார்.

No Border Dispute between Karnataka and Maharashtra: BJP Leader Basavaraj Ingin
No Border Dispute between Karnataka and Maharashtra: BJP Leader Basavaraj Ingin

By

Published : Dec 30, 2019, 7:25 PM IST


சிவசேனா ஆதரவாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (டிச29) கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை கோல்காபூர் பேருந்து நிலையத்தில் எரித்தார். இதற்கு பதிலடியாக பெலகாவி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தனர்.

இதனால் இரு மாநிலங்களுக்குக்கிடையே பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இரு மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னை இல்லையென்று கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் பசவராஜ் கூறியுள்ளார்.

மேலும் அவர், “கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே எல்லை சச்சரவு இல்லை. மராத்திய அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கட்சியின் அரசியல் லாபத்திற்காக இதுபோன்று பிரச்னைகளை பெரிதாக்குகின்றனர். மகாராஷ்டிரா மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்த பிரச்னை தற்போது கையிலெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மகாஜன் கமிஷன் (பொதுமக்கள் ஆணையம்) முடிவெடுத்துவிட்டது. இது தற்போது சட்ட ரீதியிலான விசாரணை வசமுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: கர்நாடகாவில் முதல் தடுப்புக் காவல் நிலையம் அமைப்பு?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details