இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்வானி லொஹானி ( Ashwani Lohani) வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பயணிகள் தங்களது விமானப்பயணத்தை ரத்து செய்தால், அபராதம் ஏதும் விதிக்கப்படாமல் முழுப் பணமும் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'24 மணி நேரத்துக்குள்... முழுப்பணமும் ரிட்டர்ன்!' - பணம் ரத்து
டெல்லி: முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பயணிகள் தங்களது விமானப் பயணத்தை ரத்து செய்தால், அபராதம் ஏதுமின்றி முழுப்பணமும் திருப்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம்
ஆனால், விமானம் புறப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு (ஒரு வாரம்) முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே முழுப் பணமும் திருப்பியளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated : Apr 28, 2019, 9:13 AM IST