தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 நாடாளுமன்றத்தொகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட 200க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் 185 பேர் களத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.