டெல்லி :பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமார் தான் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பிகார் மாநில தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதலமைச்சர் பதவிக்கு உரிமை கோருமா என கேட்கப்பட்ட போது, இதில் மாற்று கருத்துக்கே இடம் இல்லை. நிதிஷ் குமார் தான் அடுத்த முதலமைச்சர். இது குறித்து நாங்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.
தேர்தலுக்கு பின் பிகார் மக்களுக்கு, மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என இரட்டை இயந்திர ஆட்சி கிடைக்கும் என்றார்.