பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிகார் வைசாலி மாவட்டத்திலிலுள்ள ராஜபாகர் பகுதியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு தோல்வி கிடைக்கும். இந்து புராணங்களில் வரும் கம்சன் போன்று வீழ்த்தப்படுவார்.
தொண்டர்களும், ஆதரவாளர்களும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பலனை பற்றி கவலைப்பட வேண்டும். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.