பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து காணொலி மூலம் உரையாற்றினார். அதில், மாநிலத்தில் சிலர் தனது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள், ஆனால் அரசாங்கம் கரோனா பரிசோதனை திறனை ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது எனக் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “ பீகார் அரசாங்கம் மக்களை அச்சம் நிரைந்த சூழலிலே வைத்துக்கொள்ள விரும்புகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல் படி, மாநிலத்தில் நிகழும் குற்றங்களின் விகிதம் 40ஆக உள்ளது.
ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்புணர்வு, ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துவருவது தெரிகிறது.