தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு: நிதி ஆயோக் - 7,500 கிலோமீட்டர்

டெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் கடற்கரை நகரங்களில் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களை சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து அமைக்க நிதிஆயோக் கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு

By

Published : Aug 1, 2019, 11:38 AM IST

இது குறித்து நிதி ஆயோக் அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கூட்டுக்குடிநீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டு மட்டும் 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுத்தமான நீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மக்கள் இறக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் வரும் 2020ஆம் ஆண்டிற்குள் சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2030ஆம் ஆண்டு தண்ணீர் தேவையானது இருமடங்கு இருக்கும். அதாவது தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளும் வகையில், நிதிஆயோக் குழு தண்ணீர் சிக்கலைத் தீர்க்க முடிவு செய்துள்ளது.

அதன்படி கடற்கரை நகரங்களில் கடல்நீரை குடிநீராக்கும் மையங்களை சாகர்மாலா திட்டத்துடன் இணைத்து அமைக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஏழாயிரத்து 500 கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

சாகர்மாலா திட்டம் மூலம் இந்தியத் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே நோக்கமாகும். இதனால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும். தற்போது இந்தத் திட்டத்தில் குடிநீர் திட்டத்தையும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details