தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முடக்கப்பட்ட நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு: புதிய விண்ணப்பமும் ரத்து! - nithyananda passoport cancelled

டெல்லி: பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் சாமியார் நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ராவிஸ் குமார் கூறியுள்ளார்.

Nithyananda Passport cancelled says MinistryofExternalAffairs
Nithyananda Passport cancelled says MinistryofExternalAffairs

By

Published : Dec 6, 2019, 6:28 PM IST

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுடன் இணையத்தில் உலாவிவரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, யூ ட்யூப்களில் தான் பேசிய காணொலியை வெளியிட்டுவருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட காணொலியில், தான் ஈகுவாடார் நாட்டில் சொந்தமாக ஓர் தீவு வாங்கிவிட்டதாகவும் அத்தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

அவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்தாலும், அவர் எங்கியிருக்கிறார் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. தனது பக்தர்களுக்காக தினமும் காணொலியில் ஆன்மிக சொற்பொழிவாற்றிவரும் அவர், எந்த நாட்டிலிருந்து இதையெல்லாம் செய்கிறார் என்று கண்டுபிடிக்க இந்திய வெளியுறவுத் துறைக்கு சிரமமாக உள்ளதென அதன் செய்தித் தொடர்பாளர் ராவிஸ் குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நபராக நித்தியானந்தா இருப்பதால், அவரின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய கடவுச்சீட்டு பெறுவதற்கு அவர் அளித்த விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளோம்.

அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது. ஒருவேளை அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்தால், தூதரகத்தின் மூலம் அவரைப் பிடிப்போம்” என்றார்.

இதையும் படிங்க: 'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details