தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு

டெல்லி : நிர்பயா வழக்கில் மரண தண்டனை குற்றவாளிகளுள் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

nirbhaya case
nirbhaya case

By

Published : Feb 1, 2020, 11:07 AM IST

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், வினய் சர்மா தன்னை தூக்கிலிட வேண்டாம் என குடியுரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதனை தற்போது நிராகரித்துள்ளார்.

முன்னதாக, மரண தண்டனை குற்றவாளிகளுக்கு இன்று காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிங்க :நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை!

ABOUT THE AUTHOR

...view details