டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்குதல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இறுதியாக நான்கு குற்றவாளிகளுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், டெல்லி நீதிமன்றம் அதற்கு திடீரென தடைவிதித்த நிலையில், அந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.