தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரேகுந்தா பகுதியில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்று (மே 21), உள்ளூர்வாசிகள் நான்கு உடல்களைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில், மேலும் ஐந்து உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கலில் உள்ள சிவநகர் பகுதியில் வசித்து வந்தனர்.