இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்துவருகிறது. இருப்பினும், இதற்கு நேர்மாறாக டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அகமதாபாத் நகரில் 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நகரில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,030ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அகமதாபாத் உள்ளது.