தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 9:00 PM IST

ETV Bharat / bharat

பிரிவினைவாதிகளின் சொத்துகளை முடக்கும் தேசிய புலனாய்வு முகமை

பிரிவினைவாத அமைப்பான எஸ்.எஃப்.ஜேவைச் சேர்ந்த இரு பிரிவினைவாதிகளின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை முடக்கவுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை
தேசிய புலனாய்வு முகமை

'காலிஸ்தான்' நாடு உருவாக்கத்திற்காக 'சீக்கிய வாக்கெடுப்பு 2020' என்று பிரிவினைவாத அமைப்பான எஸ்.எஃப்.ஜே (Sikhs for Justice) தொடங்கிய ஒருங்கிணைந்த பரப்புரை தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் பன்னூன் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் (UAPA) சட்டத்தின்கீழ், பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டனர். காலிஸ்தான் நாடு கோரிக்கையை ஆதரித்து எஸ்எஃப்ஜே மற்றும் காலிஸ்தான் புலிப்படை ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து என்ஐஏ அலுவலர் கூறுகையில், ''உபா சட்டத்தின் பிரிவு 51 ஏ-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி நிஜ்ஜார், பன்னூன் ஆகியோரின் அசையா சொத்துக்களை இணைக்க உத்தரவிட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதன்மூலம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பைச் (எஸ்.எஃப்.ஜே) சேர்ந்த உறுப்பினர் குர்பத்வந்த் சிங் பன்னூன் மற்றும் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் புலிகள் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஆகியோரின் அசையா சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை முடக்கவுள்ளது.

இதையும் படிங்க:பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது' - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

ABOUT THE AUTHOR

...view details