கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸ் மூர்த்தி. இவரின் உறவினர் நவீன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டார்.
இதனால் அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸின் வீட்டினை முற்றுகையிட்டனர். அது திடீரென கலவரமாக மாறியது. இது காவல் துறையினருக்கு தெரிய வரும்போது, வன்முறை சம்பவம் அளவுக்கு மீறியது.கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகளை என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இன்று மட்டும் பெங்களூருவில் உள்ள கலவரம் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பான இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் முன்னணியின் (பி.எஃப்.ஐ) அரசியல் பிரிவு அலுவலகம் என 43 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின்போது கத்தி, வாள், இரும்பு கம்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.