டெல்லி:வர்த்தக நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி மற்றும் நிலக்கரித்துறை சார்ந்த பணிகளுக்கான ஒற்றை சாளர முறையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமித்ஷா, "நாட்டின் பொருளாதாரத்தை 2025ஆம் ஆண்டுக்குள் ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கில், நிலக்கரித் துறையின் பங்கு மிகப்பெரியது. உலகின் மிகப்பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள நம் நாட்டில், நிலக்கரியை இறக்குமதி செய்வது சரி அல்ல" என்றார்.
இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, " நிலக்கரி சுரங்க ஏலத்தின் அடுத்தப்பகுதி இம்மாத இறுதியில் தொடங்கும். ஒற்றை சாளர முறை மூலம், நிலக்கரித் துறையில் எளிதில் பணியைத் தொடங்க முடியும். முன்னதாக, நிலக்கரி சுரங்கத்தை தொடங்க 19 முக்கிய அனுமதிகளை பெறவேண்டியிருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. ஒற்றை சாளர முறை மூலம் எளிதில் அனுமதி பெற முடியும்.