தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய கல்வி அமைச்சகம் தகவல் - புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய கல்வி அமைச்சகம்
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய கல்வி அமைச்சகம்

By

Published : Sep 19, 2020, 4:25 PM IST

Updated : Sep 20, 2020, 1:10 AM IST

16:16 September 19

டெல்லி: புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மொழி என்ன என்பது மாநில அரசுகளின் விருப்பம், எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் கல்வி அமைச்சம் கூறி உள்ளது.

Last Updated : Sep 20, 2020, 1:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details