புதுச்சேரி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் பகுதியில், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1 கிலோ மீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இவ்விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “புதுச்சேரி-விழப்புரம் தேசிய நெடுஞ்சாலை 29 கி.மீ. அளவிற்கு விரைவில் அகலப்படுத்தப்படவுள்ளது. மரக்காணம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 926 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் ராஜீவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் மதிப்பில் 2 கி.மீ. தூரத்திற்கும், இந்திரா காந்தி சதுக்கத்தில் 196 கோடி செலவில் 2 கி.மீ. தூரத்திற்கும், மேம்பாலங்கள் அடுத்தாண்டு அமைக்கப்படும்.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்பது எனது கனவு. புதுச்சேரி அரசும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் “ என்றார்.