பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப் பருவத்தின் அரிய புகைப்படங்கள் தொடங்கி, அதிகம் அறியப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் வரை அடங்கிய, 'நரேந்திர மோடி ஹர்பிங்கர் ஆஃப் ப்ராஸ்பரைட்டி அண்ட் அப்போசில் ஆஃப் வேர்ல்ட் பீஸ்' (Narendra Modi Harbinger of Prosperity & Apostle of World Peace) எனும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களால் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கின் மத்தியில், இணையம் வழியாக நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு, இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆதிஷ் சி. அகர்வாலா தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகத்தை சர்வதேச நீதிபதிகள் கவுன்சிலின் தலைவரும், அகில இந்திய பார் அசோசியேஷனின் தலைவருமான அகர்வாலாவும், அமெரிக்க எழுத்தாளரும், கவிஞருமான எலிசபெத் ஹொரனும் இணைந்து எழுதியுள்ளனர்.