தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸும் சீன கம்யூனிஸ்டும் ஒப்பந்தம் செய்து கொண்டனவா ? - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி ! - ரகசிய ஒப்பந்தம்

டெல்லி: உயர்மட்ட தகவல் பரிமாற்றம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்பந்தம் செய்து கொண்டனவா ? - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி !
காங்கிரஸும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்பந்தம் செய்து கொண்டனவா ? - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி !

By

Published : Aug 7, 2020, 5:10 PM IST

காங்கிரஸ் - சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தம் குறித்து சவியோ ரோட்ரிக்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, சீனாவுடன் ஒரு உடன்படிக்கை செய்துள்ளது. அந்நிய நாட்டின் ஆளும் கட்சியுடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக யுஏபிஏ சட்டம், 1967இன் கீழ் வழக்கு பதிந்து, என்ஐஏ / சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 7) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உயர்மட்ட அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், ஒரு அரசியல் கட்சியுடன் ஒரு வெளிநாட்டு அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கேள்விப்பட்டதில்லை. இது அபத்தமானது. மனுதாரர் இந்த விவகாரத்திற்காக உயர் நீதிமன்றத்தை அணுகலாம். இது குறித்து எந்த செய்தியும் கேள்விப்படாததால் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய வேண்டும்" என உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details