தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2019, 7:51 AM IST

ETV Bharat / bharat

நெதர்லாந்து அரசர், அரசி இந்தியா வருகை

டெல்லி: நெதர்லாந்து அரசர் வில்லெம் அலெக்ஸாண்டர், அரசி மேக்ஸிமா ஆகியோர் வரும் 14ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர்.

Netherlands king Queen

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பை ஏற்று, நெதர்லாந்து நாட்டின் அரசர் வில்லெம் அலெக்ஸாண்டர் (Willem Alexander), அரசி மேக்ஸிமா (Queen Maxima) ஆகியோர் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
அதுமட்டுமின்றி, டெல்லியில் நடைபெறவுள்ள 25வது தொழில்நுட்ப மாநாட்டிலும் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தலைநகர் டெல்லியைத் தவிர, மும்பை, கேரள மாநிலங்களையும் சுற்றிபார்க்கவுள்ளனர்.

அவர்களுடன் நெதர்லாந்து நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரும் வருவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகஅறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2013-ல் நெதர்லாந்து அரசராக அலெக்ஸாண்டர் முடிசூடப்பட்டு, அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details