தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்க நேபாள் தீவிரம்

புபனேஸ்வர்: நேபாள் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா தலைநகர் புபனேஸ்வரில் ''விசிட் நேபாள் 2020' (Visit Nepal 2020) என்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது.

By

Published : Jul 6, 2019, 7:36 AM IST

nepal

அண்டை நாடான நேபாளுக்கு அதிகளவிலான இந்தியர்கள் சுற்றுலா செல்கிறனர். நேபால் சுற்றுலா வாரியத்தின் படி, கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்து 438 இந்தியர்கள் அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20 லட்சமாக அதிகரிக்கும் நோக்கில், 'விசிட் நேபாள் 2020' என்ற பரப்புரையை அந்நாடு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் பகுதியாக, ஒடிசா தலைநகர் புபனேஸ்வரில் 'விசிட் நேபாள் 2020' பரப்புரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், சுற்றலாப் பயணிகளை அதிகரிப்பதற்காக போக்ஹாரா, லும்பிணி என இரண்டு சர்வதேச விமான நிலையம் அமைக்க நேபாள் அரசு முடிவுசெய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details