சசசுத்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி) எனும் இந்திய -நேபாள எல்லையை பாதுகாக்கும் மத்திய அரசின் ஆயுதப்படை உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சுஸ்தாவின் அருகே நேபாளத்தில் நான்கு ஹெலிக்காப்டர் தரையிறங்கு தளம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவற்றில் ஒரு ஹெலிபேட் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்திற்காக நேபாளம் பத்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இது குறித்து எஸ்.எஸ்.பி. -யின் 21ஆவது படைப்பிரிவின் கமாண்டர் ராஜேந்திர பரத்வாஜ் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்னரே, சர்சைக்குரிய பகுதியில் ஹெலிபேட் கட்ட உள்ளது குறித்து புலனாய்வில் வெளிவந்தது என்றும், இது குறித்து ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.