தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகில இந்திய இட ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படும் ஓபிசி பிரிவினர்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு! - திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு

டெல்லி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மூன்று ஆண்டுகளாக ஓபிசி பிரிவினர் புறக்கணிக்கப்படுகிறார்கள் என திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

neglected-obcs-in-all-india-reservation-dmk-ls-member-tr-balu
neglected-obcs-in-all-india-reservation-dmk-ls-member-tr-balu

By

Published : Sep 20, 2020, 12:52 AM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், 6ஆம் நாளான நேற்று திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், ’’உச்சநீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக அனைத்து மாநில மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களது 15 சதவிகித மருத்துவ உயர் படிப்பிற்கான இடங்களையும், 50 சதவிகித மருத்துவ பட்ட படிப்பிற்கான இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

தமிழ்நாடு சார்பாக 2017 முதல் 2019 வரையிலும் 1380 UG மருத்துவ இடங்களை அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. அதேபோல் 2017 முதல் 2020 வரை 3098 PG மருத்துவ இடங்களை அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 4498 மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்குகிறோம்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 1993ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சார்பாக 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஓபிசி பிரிவினர் புறக்கணிக்கப்படுகின்றனர். முக்கியமாக மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மூன்று ஆண்டுகளாக ஓபிசி பிரிவினர் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இது இந்திய அளவில் நடந்துவருகிறது. அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுகளிலும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்களே தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு பேச்சு

ஆனால் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அரசு பணிகளில் சேர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:நகைக்கடையில் நஷ்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details