தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்தாண்டு நீட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஹைதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET exam
NEET exam

By

Published : Oct 26, 2020, 5:42 PM IST

மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சேர்க்கை, தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள், விண்ணப்பத்தை எப்போது சமர்ப்பிக்க வேண்டும், தேர்வு தேதி, தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவை குறித்து அதில் வெளியிடப்பட்டுள்ளது.

http://nbe.edu.in என்ற இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் நுழைவுச்சீட்டு டிசம்பர் 16ஆம் தேதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details