மருத்துவ மாணவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வும், ஐஐடி பல்கலைக்கழகங்களில் சேர ஜெ.இ.இ நுழைவுத் தேர்வும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோவிட்-19 பரவலைக் கருத்தில்கொண்டு நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும்வரை தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில் நீட், ஜெ.இ.இ நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ள தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார்.
அதன்படி நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.