தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு டெல்லியில் அதிகாரப்பூர்வ வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டுக்கு மத்திய அரசின் ' ஒய் (Y)' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் மீது நடவடிக்கை தொடர்ந்தாலும் நரேந்திர மோடி, அமித் ஷாவை உறுதியாக எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா அமைச்சர் ஜிதேந்திர அக்வார்ட் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரித்தார்.