தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் குழப்பம்..!

மும்பை: காங்கிரஸ் கூட்டணியில் 20 வருடமாக நீடிக்கும் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரத் பவார்

By

Published : Jul 17, 2019, 2:23 PM IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் மட்டும் வென்று படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு உருவானது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் 20 வருடமாக நீடிக்கும் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் 26 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வென்றது. ஆனால் 21 இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களை கைபற்றியது. காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்றதால் சட்டப்பேரவைத் தேர்தலில் சமமான இடங்களில் போட்டியிடவே தேசியவாத காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்டான சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள போகிறது என கேள்வி எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details