மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்குபின் பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றது.
தற்போது நாட்டிலேயே அதிக கரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நிர்வாகம் குறித்து விமர்சனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசின் செயல்பாட்டைக் குற்றஞ்சாட்டி பாஜக ஆளுநரிடம் முறையீடு செய்துவரும் நிலையில், இன்று கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அம்மாநில ஆளுநர் பி.எஸ். கோஷயாரியைச் சந்தித்தார்.