ஜம்மு - காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370இன் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுவந்தது. இதனை மத்திய பாஜக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து நீக்கியது. இதற்கு ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; நீதிமன்றத்தை நாடும் தேசிய மாநாட்டு கட்சி! - தேசிய மாநாட்டு கட்சி
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய மாநாட்டு கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
SC
முகமது அக்பர் லோன், முசூதி ஆகியோர் தேசிய மாநாட்டு கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து குடியரசு தலைநர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது, எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.