ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மூவரின் கைதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதத்தில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் மற்ற இருவரையும் விரைவில் விடுதலை செய்யவும் வலியுறுத்தியுள்ளன.