தூய்மை கங்கை திட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கங்கையை சுத்தம் செய்யும் பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 2014ஆம் ஆண்டு மத்திய அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தூய்மை கங்கை திட்டம் - களப்பணியில் தன்னார்வலர்கள்! - மத்திய அரசு
உத்தரகாண்ட்: தூய்மை கங்கை திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, காயமடைந்த வனவிலங்குகளையும் மீட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் கங்கையை சுத்தம் செய்யும் பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்கின்றனர். இது குறித்து தூய்மை கங்கை தேசிய திட்டத்தின் இயக்குநர் ராஜிவ் ரன்ஜன் கூறுகையில், உள்ளுரிலேயே சமூக ஆர்வமுள்ள சிலரை தேர்வு செய்து, அவர்களுக்கு கங்கை நதியை சுத்தம் செய்யும் முறைகள் குறித்து சில பயிற்சிகளை அளித்துள்ளதாகவும், அவர்கள் எல்லைப் பகுதிகளின் நதிக்கரையில் உள்ள பிளாஸ்டிக்கைப் போன்ற கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வதாகவும், மேலும் அப்பகுதியில் காயமடைந்த நிலையில் இருக்கும் வனவிலங்குகளையும் மீட்பதாகவும் அவர் தெரிவித்தார்.