தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - தேசிய மருத்துவ ஆணைய மசோதா

டெல்லி: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Rajya sabha

By

Published : Aug 2, 2019, 2:26 AM IST

மக்களவையில் ஜூலை 29ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'எக்சிட் தேர்வு' ரத்து செய்யப்பட வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் இதற்கான வாக்குறுதி அளிக்கப்படாமலே மாநிலங்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது. இதனால் மாநிலங்களவையில் வாக்கெடுப்பின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது.

இந்த மசோதாவின்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மருத்துவர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details