தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்காக நாடு மொத்தமும் விலை கொடுத்துள்ளது - குஜராத் காங்கிரஸ் தலைவர் - பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி

டெல்லி: அகமதாபாத்தில் பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கா தேசம் முழுவதும் தற்போது விலை கொடுத்து வருகிறது என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

sds
sd

By

Published : May 8, 2020, 11:20 AM IST

நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாக பாதித்த மாநிலங்களை பார்க்கும்போது, மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக குஜராத் மாநிலம்தான் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதுவரை கரோனாவால் 6 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 396 பேராக உயர்ந்துள்ளது. தினந்தோறும் கரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ள அகமதாபாத்தில்தான் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்தினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா தனது ட்விட்டரில், " மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியால்தான் அகமதாபாத் குஜராத்தின் முக்கிய பகுதியாக மாறியது. தற்போது, இந்த நிகழ்ச்சி காரணமாக குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் விலை கொடுத்து வருகிறது.

குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது பொய்யானது. குஜராத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தையே இந்த குஜராத் மாதிரி வளர்ச்சி எனும் வார்த்தை அழித்துவிடும்" எனப் பதிவிட்டார்.

இதையும் படிங்க:புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details