சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. இரண்டு நாள்கள் சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் கோவளத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் ப. தனபால்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, தேனி மக்களவை உறுப்பினர் ப. ரவீந்திரநாத் குமார், மத்தியமுன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் உள்ளிட்ட பலரும் பொன்னாடை போர்த்தி வழியனுப்பிவைத்தனர்.