தொலைக்காட்சி சேனல்கள், வாட்ஸ்அப் பார்வேர்ட்கள், போலி செய்திகள் மூலம் வெறுப்புவாதம் பரப்பப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, உண்மையான செய்திகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வீடியோக்களை பகிர்ந்துகொள்கவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஜூலை20) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தான் ஒரு இரும்பு மனிதர் என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார் நரேந்திர மோடி. அது அவரது பலமாக இருந்தது. ஆனால், நாட்டிற்கு மிகப் பெரிய பலவீனமாக அமைத்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி, "இது(இந்தியா-சீனா) வெறுமனே எல்லைப் பிரச்னை அல்ல. எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால், இன்று சீனா நமது பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். புதிய உலகை உருவாக்க முயற்சிப்பதாக, அவர்கள்(சீனா) உலகிற்கு காட்டிக்கொள்கின்றனர்.
எனவே, சீனாவைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். எல்லையில் சீனா தங்கள் இருப்பை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள். கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் பாங்காங் த்சோ ஏரி ஆகியவற்றில் அவர்களது செயல்பாடுகள் இதைத்தான் காட்டுகிறது.
அவர்கள் நமது நெடுஞ்சாலைகளில் பிரச்னை செய்கிறார்கள், அவற்றை அக்கிரமிரக்க விரும்புகின்றனர். மேலும், பிரதமர் மோடி மீது அழுத்தத்தை உருவாக்க, அவர்கள் பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிர்சனையில்கூட ஏதாவது செய்யலாம்.