பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலையதளங்களிலிருந்து தான் விலகுவது குறித்து சிந்தித்துவருவதாகதிங்கள்கிழமை ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து மோடி ட்விட்டரிலிருந்து விலகக்கூடாது என்று ஒரு சாராரும், நல்ல முடிவு என்று மற்றொரு தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பெண்கள் தினத்தன்று (மார்ச் 8) தனது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த மகளிர் தினத்தில், எனது சமூக ஊடக கணக்குகளை மற்றவர்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் பெண்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.