தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மரக் கன்று நட்டு, தேசிய பசுமை திட்டத்தை தொடக்கி வைத்த நாராயணசாமி!

புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மரக்கன்று நாட்டு தேசிய பசுமை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Aug 15, 2020, 2:04 PM IST

புதுச்சேரியில் 74ஆவது சுதந்திர தின விழாவையொட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமை‌ச்ச‌ர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் கரானா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் சட்டப் பேரவை எதிர் வளாகத்தில் மா மரக் கன்றை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடக்கி வைத்தார்.

அதேபோல சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதையும் படிங்க:கரோனா பணிகள்: வாரம் ஒரு முறை 850 கி.மீ. காரில் பயணிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details