தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி அரசுக்கு நிதி வழங்க வேண்டும் - நாராயணசாமி கோரிக்கை - கரோனா புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரி: அரசுக்கு தேவையான நிதி உதவி வழங்கவேண்டும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

narayanasamy
narayanasamy

By

Published : May 27, 2020, 12:43 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (மே 26) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கரோனா வைரஸ் தொற்றால் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கரோனா பாதிப்பு 11 ஆயிரமாக உள்ளது. வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் இளைஞர்கள் விரைவில் குணமடைந்து விடுகின்றனர். முதியோர் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளி நாட்டிலிருந்து யார் வந்தாலும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

கரோனா நோய்த் தொற்று வரும் மாதங்களில் அதிகளவு பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒருபுறம் கரோனாவை கட்டுப்படுத்த உதவ வேண்டும், மற்றொரு புறம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. மாநில அரசுக்கு தேவையான நிதி உதவி வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மத்திய நிதி அமைச்சர் பல்வேறு நிதி ஆதாரங்களை வெளியிட்டார். கரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலத்துக்கு தேவையான நிதியையும், மருத்துவ உபகரணங்களையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க : முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details