தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விஷவாயுக் கசிவு: விசாரணைக் குழுவை அமைக்க பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

அமராவதி: விசாகப்பட்டினம் ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு பேரிடர் குறித்து அறிவியல்பூர்வமான விசாரணையை நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

Naidu writes to PM, requests scientific probe into Vizag gas leak incident
விஷ வாயுக் கசிவு பேரிடர் : விசாரணை குழுவை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரபாபு நாயுடு!

By

Published : May 9, 2020, 1:45 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ்பட்டினம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தக் கோர ஸ்டைரீன் விஷவாயுக் கசிவின் காரணமாக, சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால், இதுவரை ஒரு சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பேரிடர் குறித்து அறிவியல்பூர்வமான விசாரணையை நடத்த பிரதமர் நரேந்திர மோடி வல்லுநர் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு பரவியது தொடர்பாகவும், பேரிடர் நிகழ காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்தும் விசாரிக்க ஒரு அறிவியல் வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும்.

நீண்ட நாள்கள் கழித்து ரசாயனத் தொழிற்சாலை இயங்கியதால் எதிர்பாராதவிதமாக ஸ்டைரீன் விஷவாயு கசிந்தது என்று அந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அந்தப் பேரிடரில் ஸ்டைரீன் விஷவாயு மட்டுமல்லாது இன்னும் பிற நச்சு வாயுக்களும் கசிந்து இருப்பதாக முரண்பட்ட அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், சுகாதார பாதிப்புகளைப் புரிந்துகொள்ள இது தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். விசாகப்பட்டினம் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும் சூற்றுச்சூழலையும், காற்றின் தரத்தையும் கண்காணிக்க வேண்டும்.

விசாகப்பட்டினத்தில் சுகாதார மதிப்பீட்டிற்காக தேசிய அளவிலான வல்லுநர்கள், சர்வதேச அறிவியலாளர்கள் அடங்கிய குழுவை ஆய்வுப் பணிகளுக்கு நியமிக்க வேண்டும். நீண்டகால சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது மேலும், இழப்பீடு வழங்க இந்த மதிப்பீடு உதவியாக இருக்கும்” என வேண்டுகோள்-விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சி.பி.சி.பி.) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஆகியவை எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயனத் தொழிற்சாலையிடம் விளக்கம் கோரியுள்ளன. இந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட நாசங்களைக் கவனத்தில்கொண்டு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்துமாறு எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதம்

விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும், விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதம்

விசாகப்பட்டின தனியார் ரசாயன ஆலையால் ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயு கசிவுப் பேரிடர் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :ஸ்டைரீன் விஷவாயுவை கட்டுப்படுத்தும் பி.டி.பி.சி ரசாயனம் விசாகப்பட்டினம் வந்தடைந்தது!

ABOUT THE AUTHOR

...view details