அன்னையர் தினத்தில் அனைவரும் வாழ்த்து தெரிவித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது:-
நான் இளைய மகனாக வளர்ந்தேன். தனது பதினான்கு குழந்தைகளில் பதினொன்றை இழந்தார் கல்யாணி. வாழ்க்கையில் உள்ள அனைத்து சிரமங்களையும் சமாளிக்க என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
என் தாய் என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினார். எனது தந்தையின் நோய் மற்றும் ஆரம்பகால மரணம் காரணமாக, எனது தாயார் குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அம்மா அந்த பொறுப்பை தைரியத்துடன் நிறைவேற்றினார்.
மேலும், “நாடு கடுமையான நெருக்கடியைக் கடந்து செல்லும்போது, நாம் அனைவரும் அதை அசாதாரண ஆற்றலுடன் கடக்க வேண்டும். நமது நினைவுகளில் தாய்மார்கள் இருக்கும் வரை, தியாகம் மற்றும் சுயநிர்ணயத்திற்கான உதாரணங்களைத் வெளியே தேட வேண்டிய அவசியமில்லை.
இந்த அன்னையர் தினத்தன்று, நான் என் அம்மாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எல்லா தாய்மார்களுக்கும் நன்றி. இதை ஒன்றாக முன்னோக்கி நகர்த்துவோம். தாய்மையின் உறுதி, தியாகம், கருணை, தைரியம் ஆகியவற்றை உறுதியாக பற்றி பிடிப்போம்” என அந்தப் பதிவை நிறைவுப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: பயணிகள் ரயில் 12ஆம் தேதி முதல் இயங்கும்: ரயில்வே அறிக்கை