தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கடலில் மூழ்கிய கப்பலாக மாறியுள்ளது - அசாதுதீன் ஓவைசி விமர்சனம் - muslim living in india not because of congress

மும்பை: இந்தியாவில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவது காங்கிரஸ் கட்சியினால் அல்ல என்றும், காங்கிரஸ் என்னும் கட்சி கடலில் மூழ்கிய கட்சி போல் மாறிவிட்டது என்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.

asaduddin owaisi

By

Published : Oct 15, 2019, 6:24 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அம்மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "இந்தியாவில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து 70 ஆண்டுகளாகவாழ்ந்து வருவது காங்கிரஸ் கட்சியினால் அல்ல, அரசியலமைப்பினாலும், கடவுளாலும் தான். காங்கிரஸ் கட்சி என்னும் கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. காந்தி என்னும் தலைவர் இருந்த வரை காங்கிரஸ் கட்சி நிலையானதாக இருந்தது, அவருக்குப் பின் அக்கட்சியை வழி நடத்தியவர்களால், அது கடலில் மூழ்கிய கப்பல் போல் மாறியது" என்றார்

மேலும், இந்திய நாடு இந்துக்களின் நாடு என்று கூறுவதை முற்றிலும் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அசாம் குடிமக்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு ஓவைசி சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details