இமாச்சலப் பிரதேசம், சோலான் நகரத்தை காளான் நகரம் என்று அழைப்பார்கள். இப்பகுதியில் அதிகப்படியாக விவசாயிகள் காளான்களை சாகுபடி செய்வார்கள்.
தற்போது பொது ஊரடங்கால் வேலை ஆட்கள் குறைந்துள்ளதால் சாகுபடியும் சரி; உற்பத்தியும் சரி சரிவைச் சந்தித்துள்ளன. காளானில் 90 விழுக்காடு தண்ணீரை, அது தன்னுள் உள்ளடக்கி வைத்துக்கொள்வதால், சாகுபடி செய்த காளான்கள் சந்தையில் விற்பனையின்றி, பதப்படுத்த முடியாமல் அழுகிப்போய்விடுகிறது.
இந்தியா முழுவதும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான, சீசனில் காளான்களை ஒடிசா, மத்தியப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்க்கிறார்கள்.
ஊரடங்கால் 50 விழுக்காடு அளவுதான் காளான்கள் விற்பனையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காளான் உற்பத்தியில் இந்தியாவிற்குப் போட்டியாக இருப்பது சீனா தான். ஆகையால் அந்நாட்டில் இருந்து தற்போது இறக்குமதியாகும் காளான்களுக்கு கூடுதல் வரிவிதித்தால், இந்தியாவில் விற்கப்படும் காளான்களுக்கு நல்ல விலைக்கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
லாக்டவுனால் முடங்கியது காளான் விவசாயம்