மும்பை அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு சென்று உரிய நேரத்தில் வழங்கும் பணியை செய்யும் தொழிலாளர்கள்தான் டப்பாவாலாக்கள். ஆண்டு முழுவதும் இதே பணியைச் செய்து வருகிறார்கள். இந்த டப்பாவாலாக்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் திருமணத்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று மும்பையில் இருந்து பல டப்பாவாலாக்கள், இளவரசரின் திருமணத்தில் பங்கேற்று, தம்பதியை வாழ்த்தி விட்டு நாடு திரும்பினர். இந்நிலையில் கடந்த வாரம் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது.
மும்பை டப்பாவாலாக்களின் பரிசால் இங்கிலாந்து இளவரசர் நெகிழ்ச்சி - சிறப்பு பரிசு
லண்டன்: இங்கிலாந்து குட்டி இளவரசருக்கு மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் தங்கம், வெள்ளியிலான நகைகளை பரிசாக அனுப்பி வைத்தனர்.
குட்டி இளவரசருடன் ஹாரி தம்பதி
குட்டி இளவரசரான அந்த குழந்தைக்கு டப்பாவாலா சங்கம் சார்பில் வெள்ளியால் ஆன கொலுசு, வளையல், இடுப்பு கொடி, செயின் மற்றும் தங்கத்திலான அனுமன் டாலர் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர். இளவரசர் காலத்தில் இருந்தே இந்த நட்பு தொடர்வதால், இதை சிறப்பிக்கும் வகையில் டப்பாவாலாக்கள் சங்கம் சார்பில் பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த அன்பு பரிசினை பார்த்து இங்கிலாந்து இளவரசர் உட்பட அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.