மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் பஸ், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கனமழை - விமான நிலையம் மூடல்! - கனமழை
மும்பை: மும்பையில் பெய்துவரும் தொடர் மழையால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
மும்பையில் கனமழை - விமான நிலையம் மூடப்பட்டது
இந்நிலையில் விமான நிலைத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், விமானம் தரை இறக்க முடியாத நிலை உள்ளது. வெளிச்சம் மிகக் குறைவாக இருப்பதால் விமான நிலையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் இங்கிருந்து புறப்படும் விமானங்கள், வந்து சேரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.