முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பிரணாப் முகர்ஜி சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஆக்ஸ்ட் 27) அறிக்கை வெளியிட்டது.