தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ம.பி. இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்: கமல்நாத் நம்பிக்கை - கமல்நாத் நம்பிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

mp-voters-intelligent-theyll-bring-cong-back-to-power-nath
mp-voters-intelligent-theyll-bring-cong-back-to-power-nath

By

Published : Oct 31, 2020, 5:01 PM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 15 மாதங்கள் ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் வரும் 3ஆம் தேதி 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையைப் பெறுவதற்கு 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் 28 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

இதனால் வரும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கூறுகையில், ''இடைத்தேர்தல் நடக்கவுள்ள 28 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும், வாக்காளர்கள் மீதும் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு பாஜக அரசு மீது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

கடந்த 7 மாதங்களில் பாஜக அரசால் எதையும் மாற்றவில்லை. விவசாயிகளின் பிரச்னையும், வேலைவாய்ப்பின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனை மக்கள் நிச்சயம் புரிந்து வைத்துள்ளார்கள்.

வாக்காளர்கள் ஏழையாகவும், அனுபவமின்றியும், எளிமையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அதனால் வரும் அக்.10ஆம் தேதி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்'' என்றார்.

இதையும் படிங்க:உண்மையான பிரச்னைகள் குறித்து வாய் திறக்காத நிதிஷ்குமார் - தேஜஸ்வி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details